உலகம்

இஸ்ரேல் உடனான உறவு முறிவு: கொலம்பிய அதிபர் அறிவிப்பு

Published On 2024-05-02 04:21 GMT   |   Update On 2024-05-02 05:03 GMT
  • இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரியை நாஜிக்களுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
  • இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார்.

பெகோட்டா:

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தினவிழாவில் பங்கேற்ற அதிபர் பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News