உலகம்

எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோயர்ஸை எட்டிய பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து

Published On 2024-07-20 03:53 GMT   |   Update On 2024-07-20 03:53 GMT
  • மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
  • பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

 

பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம்  பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News