டிரம்ப் வெற்றிக்கு பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்தது
- தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார்.
- எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது.
அதிபர் தேர்தலில் டிரம்புக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார். எக்ஸ் வலைதளத்தில் டிரம்புக்கு ஆதரவாக தினமும் கருத்துக்களை பதிவிட்டார். மேலும் டிரம்ப் பிரசாரத்துக்காக நன்கொடையை வாரி வழங்கினார். இதற்கிடையே தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார்.
இந்த நிலையில் டிரம்பின் வெற்றிக்கு பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்தது. அவரது சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1.68 லட்சம் கோடி) அதிகரித்து 285.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சொத்து மதிப்பு 7.73 சதவீதம் உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து 286.10 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது. இதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்தன. டிரம்ப் தனது பிரசாரத்தின்போது, தான் அதிபராக வெற்றி பெற்றால் எலான் மஸ்க்குக்கு மந்திரி பதவி அல்லது ஆலோசகர் பதவி வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.