எல்லாம் ஒரு அளவுக்குத் தான்.. நெருங்கும் அதிபர் தேர்தல் - அமெரிக்காவுக்கு வட கொரியா அணுகுண்டு மிரட்டல்
- கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மேற்கொண்டது
- தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வருகிறன.
கொரிய சாம்ராஜ்யம்
தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது.
வட கொரியா
வரலாற்றின் போக்கில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான பகைமை வளர்ந்து வந்தது. உலகின் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்து வாழும் வட கொரியா சமீப காலங்களாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தென் கொரியவுக்கு குப்பை பலூன்களை அனுப்புவது, எல்லையில் ராணுவ சோதனைகளைச் செய்வது என உலக நாடுகளையும் பயத்திலேயே வட கொரியா வைத்துள்ளது.
அணு ஆயுதம்
கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா அதுமுதல் உலகின் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளுள் முக்கியமானதாக மாறியது, இந்தியா உள்ளிட்ட மற்றைய அணு ஆயுத நாடுகள் மேற்கு நாடுகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் வட கொரியா சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதால் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாமல் மேற்கு நாடுகள் குழம்பிப்போயுள்ளது.
கிம் ஜாங் உன்
கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த கிம் ஜாங் உன் [40 வயது] மேற்குலகுக்குக் கடந்த காலங்களிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும்,தற்போதைய எச்சரிக்கை நவம்பர் 5 வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
எச்சரிக்கை
நேற்றைய தினம் [ திங்கள்கிழமை] 'கிம் ஜாங் உன்' பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய கிம் ஜாங் உன், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது. தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையானது தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வரும் சூழலுக்கிடையில் கிம் ஜாங் உன் தரப்பில் இருந்து வந்துள்ளதாகவும் பார்க்கவேண்டியுள்ளது.