உலகம் (World)

பேரு வச்சது குத்தமா? கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகைக்கு பாஸ்போர்ட் மறுப்பு.. கடைசியில் டுவிஸ்ட்..!

Published On 2024-08-06 02:04 GMT   |   Update On 2024-08-06 02:04 GMT
  • இத்தொடரில் உள்ள முக்கியமான பெண் கதாப்பாத்திரத்தின் பெயர் கலீஸி.
  • இந்த பெயரை வைத்த ஒரே காரணத்தினால் ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டது.

உலகம் முழுக்க அறியப்படும் பிரபலமான தொலைகாட்சி தொடர் கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones). இந்த தொடர் 2011 ஆம் ஆண்டு முதல் HBO தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பானது. இத்தொடரில் வரும் கதாப்பாத்திரங்கள் மிகவும் நேர்த்தியாக எழுதபட்டிருக்கும்.

இத்தொடரில் உள்ள முக்கியமான பெண் கதாப்பாத்திரத்தின் பெயர் கலீஸி. இந்த பெயரை வைத்த ஒரே காரணத்தினால் ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லண்டனை சேர்ந்த லூசி அவரது 6 வயது குழந்தையுடன் பாரீஸில் உள்ள டிஸ்னி லேண்டில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து வந்த பதில் அவர்களது சுற்றுலா கனவை கேள்விக்குறியாக்கும் வகையில் இருந்தது.

கலீஸி என்ற பெயர் இருப்பதன் காரணத்தால் உங்கள் மகளின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது. இதை கேட்ட லூசி மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

கேம் ஆஃப் திரோன்ஸ் அவர்களது பொருட்களுக்கும், கதைக்கும், மட்டுமே உரிமையுற்றவர்கள் ஆவர். கதாப்பாத்திரத்தின் பெயர்களுக்கு அவர்கள் உரிமை கோரவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு லூசி பதில் அளித்தார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் அந்த வெப் தொடரின் உரிமையாளரான வார்னர் ப்ரோஸிடம் இருந்து கலீஸி என்ற பெயரை உபயோகிக்கலாம் என்ற அனுமதி கடிதத்தை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இந்த பதில் லூசியை மிகவும் எரிச்சல் அடைய செய்தது. இதனால் இந்த பிரச்சனையை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், "என் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை பெறும் போது வராத பிரச்சனை இப்போது ஏன்? இது பிரச்சன்னை ஆகும் என்றால் அப்போதே சான்றிதழ் தர மறுத்திருக்கலாமே" என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

லூசியின் பதிவு வைரல் ஆனதை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட பாஸ்பார்ட் அலுவலக அதிகாரி, தங்கள் செயலுக்கு வருந்துகிறோம் என்றும் கலீசியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News