உலகம்

1 லிட்டர் லெமன் ஜூஸை 13.64 வினாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை.. வைரல் வீடியோ

Published On 2024-05-20 10:40 GMT   |   Update On 2024-05-20 10:40 GMT
  • டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
  • உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 16.5 வினாடிகளில் 1 லிட்டர் (4.2 கப்) லெமன் ஜூஸை 16.5 வினாடிகளில் வேகமாகக் குடித்தவர் என்ற பட்டத்தை டேவிட் தன்வசம் வைத்திருந்தார்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொடர் சாதனையாளர் ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் 16 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜுஸை குடித்து டேவிட்டின் பட்டதைத் தட்டிச் சென்றார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய டேவிட் தற்போது இந்த சாதனையைப் படைத்துள்ளார். 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸ் அருந்திய அனுபவம் குறித்து டேவிட் கூறுகையில், இந்த அனுபவம் இனிமையானதாக இல்லை என்றும் இதனால் கடுமையான வயிற்றுவலிக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

Full View

எப்போதும் புதுமையான விஷயங்களை முயற்சி டேவிட் பார்க்கும் இதுவரை 250க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் தற்போது அவர் நிகழ்த்திக்காட்டியுள்ள சாதனையையும் சேர்ந்து 165 பட்டங்களை டேவிட் ரஷ் தன்வசம் வைத்துள்ளார். உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார். 

Tags:    

Similar News