உலகம்

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு - ஹாம்பர்க் விமான நிலையம் மூடல்

Published On 2023-11-05 02:56 GMT   |   Update On 2023-11-05 04:12 GMT
  • ஹாம்பர்க் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் வானை நோக்கி 2 முறை சுட்டார்.
  • பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

பெர்லின்:

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், வானை நோக்கி 2 முறை சுட்டார். பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாகச் சென்றனர்.

விசாரணையில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தும்முன் அவருடைய மனைவி போலீசை தொடர்பு கொண்டு, அந்த நபர் 2 குழந்தைகளையும் கடத்திக்கொண்டு செல்கிறார் என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News