உலகம்

கனடாவில் வேலைக்காக வரிசையில் நிற்கும் மாணவர்கள்- வீடியோ வைரல்

Published On 2024-06-23 06:05 GMT   |   Update On 2024-06-23 06:05 GMT
  • உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
  • பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை என நிஷாத் கூறினார்.

அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் மேற்படிப்புக்காக ஆண்டு தோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் தாய் நாட்டை விட்டு மேல்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுகிறது. படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் வேலை பார்ப்பதில் வரும் சம்பளத்தில் மாணவர்கள் தங்களது இதர செலவுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நிஷாத் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். நிஷாத்தும் வேலைக்காக அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.

பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர். நிஷாத் பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இது எனது போராட்டம் நிறைந்த நாள் என்று கூறினார்.

Full View

Tags:    

Similar News