உலகம் (World)

3,400 பேரை பலி வாங்கிய நிலநடுக்கம் - முன்பே உணர்த்திய பறவைகள் கூட்டம்

Published On 2023-02-07 01:16 GMT   |   Update On 2023-02-07 01:16 GMT
  • துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 தடவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 3,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அங்காரா:

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தில் 3,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் அந்நகரைச் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

Tags:    

Similar News