ஈரான் அதிபர் மறைவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.
ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணம் அறிவிக்கப்பட்டது.
முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரான் அதிபருடன் ஹெலிகாப்டரில் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை, தற்காலிக அதிபராக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: The moment the helicopter wreckage was found by the drone team. pic.twitter.com/sjioooEfRd
— Sulaiman Ahmed (@ShaykhSulaiman) May 20, 2024