ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 3 பேர் பலி - நேதன்யாகு பகிரங்க எச்சரிக்கை
- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
- 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்'
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நேற்று முன் தினம் அதிகாலை 3.15 மணியளவில் வான்வழியாக நடந்த டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.
காசா போர் தீவிரமாகி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் அதிபர் நேதனயாகு இந்த வாரம் சந்திக்க உள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் நாட்டின் ஹோதைதா [Hodeida] நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏமானி துறைமுகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹவுதிக்களின் முக்கிய தளவாடங்களுள் ஒன்றான ஏமானி துறைமுகம் மீது இஸ்ரேலிய போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 89 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த பதிலடி தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதனயாகு, 'இஸ்ரேலியர்கள் ரத்தத்துக்கென்று ஒரு விலை உள்ளது. எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த துணிந்தால் ஹவுதிக்கள் மீது இதுபோன்ற பல தாக்குதலைகளை இஸ்ரேல் நடத்தும். தற்போது ஹோதைதாவில் எரிந்துகொண்டிருக்கும் கொண்டிருக்கும் தீ, மொத்த மத்திய கிழக்கிற்கும் தெளிவாக தெரிந்திருக்கும்என்று மிரட்டல் விடுத்துள்ளார்.