உலகம்

மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

Published On 2024-12-03 02:59 GMT   |   Update On 2024-12-03 04:17 GMT
  • மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
  • தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்கப்படும்.

இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் மசூதிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் இதாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மசூதிகளில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

Tags:    

Similar News