உலகம்

கொடூர தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு.. உச்சக்கட்ட தயார் நிலையில் இஸ்ரேல்

Published On 2024-10-06 03:24 GMT   |   Update On 2024-10-06 03:24 GMT
  • படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.
  • இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஒருபக்கம் தாக்குதல் மறுப்பக்கம் தனது படைகளை இஸ்ரேல் உச்சக்கட்ட தயார் நிலையில் வைத்திருக்கிறது.

நாளை (திங்கள் கிழமையின்) தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி பேசும் போது "இந்த நாளை எதிர்பார்த்து நாங்கள் கூடுதல் படைகளுடன் தயாராக இருக்கிறோம். எல்லையில் தாக்குதல்கள் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய குழு சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,205 பேர் கொல்லப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், சிறைபிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.

கொடூர தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து, காசாவில் போர் குறைந்த வேகத்தில் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது கவனத்தை வடக்கு லெபனான் பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News