உலகம்

வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு - இஸ்ரேல் ராணுவம்

Published On 2024-06-21 01:16 GMT   |   Update On 2024-06-21 01:16 GMT
  • பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக தகவல்.
  • பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனௌனில் நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ட் ஹனௌனில் ஸ்னைப்பர் பிரிவுக்கு தலைமை வகித்த அகமது அல் சவர்கா ராணுவ போர் விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்தார்.

இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்படுகிறது. மத்திய காசா மற்றும் தெற்கு ரஃபா பகுதிகளில் ஹமாஸ்-ஐ அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து காசாவில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் கூறும் போது இதுவரை பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 653 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தனர். 

Tags:    

Similar News