டிரம்ப் அதிபரானால் 'அணில்'களை காப்பாற்றுவார் - எலான் மஸ்க்
- அரசு மேற்கொண்ட நடவடிக்கை இரக்கமற்ற செயல்.
- பீனட் உடன் வீடியோ எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
நியூ யார்க் அரசு அதிகாரிகள் இணையத்தில் அதிக பிரபலமாக இருந்த அணில்- 'பீனட்'-ஐ கொன்று குவித்ததற்கு முன்னணி பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்தார். பீனட் உயிரிழப்புக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில், "அதிபர் டொனால்டு டிரம்ப் அணில்களை காப்பாற்றுவார். RIP பி'னட்," என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் பினட் புகைப்படத்தினை இணைத்துள்ளார். இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை இரக்கமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில் பீனட்-ஐ ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரத்தில் உருவாக்கப்பட்ட படத்தை பதிவிட்டு, "நீங்கள் என்னை அடித்தால், நீங்கள் கற்பனை செய்வதை விட நான் அதிக சக்தி வாய்ந்தவனாக மாறுவேன்," என குறிப்பிட்டுள்ளார்.
நியூ யார்க்கை சேர்ந்த மார்க் லாங்கோ பீனட் என்ற அனிலுடன் ஏழு ஆண்டுகளாக வாழந்து வந்தார். அவ்வப்போது பீனட் உடன் வீடியோ எடுத்து வெளியிடுவதை மார்க் லாங்கோ வாடிக்கையாக கொண்டிருந்தார்.