உலகம்

ஹமாசின் சீனியர் ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் ராணுவம்

Published On 2024-06-24 15:03 GMT   |   Update On 2024-06-24 15:03 GMT
  • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி.
  • புலனாய்வு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காசா முனையில் நடத்திய தாக்குதலில் ஹமாசின் சீனியர் ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாசின் ஆயுத தயாரிப்பு தலைமையகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் முகமது சாலா கொல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது. புலனாய்வு அடிப்படையில் ரபா பகுதி மீதான இலக்கு தாக்குதல் (ஒரு இடத்தை குறிவைத்து தாக்குதல்) தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 37 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்தனர்.

Tags:    

Similar News