ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் 121 பேர் பலி: ஜப்பான் பிரதமர் இரங்கல்
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் இரங்கல் தெரிவித்தார்.
டோக்கியோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா அந்நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹத்ராஸ் சம்பவம் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.