இஸ்ரேல் பிரதமரை சந்திக்கும் ஜோ பைடன்
- வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
- அதிபர் உடல்நிலை சரியாக வேண்டும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, வாஷிங்டனில் வைத்து அதிபர் பைடனை சந்திக்கலாம்.
எனினும், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் அதிபர் பைடனின் உடல்நிலையை பொருத்தே இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
"பிரதமர் நேதன்யாகு நகரில் இருக்கும் போது, இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும், தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது. அதிபர் உடல்நிலை சரியாக வேண்டும், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைய வேண்டும்," என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் பட்சத்தில் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் குறித்த ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக அதிபர் பைடன் ஹமாஸ் உடன் அமைதி ஒபந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.