உலகம் (World)

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு

Published On 2024-10-01 17:55 GMT   |   Update On 2024-10-01 20:58 GMT
  • ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
  • மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.

இஸ்ரேல்:

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.

ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News