உலகம்

இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் கொண்டு செல்வோம்... சர்ச்சை கருத்து குறித்து ராகுல் விளக்கம்

Published On 2024-09-11 15:53 GMT   |   Update On 2024-09-11 15:53 GMT
  • அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
  • 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.

பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தனது கருத்தை யாரோ தவறாக புரிந்துகொண்டு தன்னை இடஒதுக்கீட்டுக்கு எதிரானவனாக சித்தரிக்க முயல்கின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு நீக்கம் குறித்த தனது கருத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ள ராகுல், நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன்.நான் ஒருபோதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை. என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News