உலகம்

இலங்கை அதிபரை சந்தித்த மத்திய மந்திரி முரளீதரன்

இலங்கை 75-வது சுதந்திர தின விழா - மத்திய மந்திரி முரளீதரன் பங்கேற்றார்

Published On 2023-02-04 23:33 GMT   |   Update On 2023-02-04 23:33 GMT
  • இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
  • இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பங்கேற்றார்.

கொழும்பு:

ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றதுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை வி.முரளீதரன் தனித்தனியாக சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பாக வி.முரளீதரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

இந்த 75-வது சுதந்திர தின விழாவை இலங்கையின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபரை சந்தித்த மத்திய மந்திரி முரளீதரன்

Tags:    

Similar News