உலகம்

சிறைச்சாலை பிரதான வாயில்

தேசிய தினத்தில் 5,774 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது மியான்மர்

Published On 2022-11-17 17:00 GMT   |   Update On 2022-11-17 17:00 GMT
  • மியானமரில் உள்நாட்டு தலைவர்கள் தவிர வெளிநாட்டினர் சிலரும் கைதாகி சிறையில் உள்ளனர்.
  • தூதராக பணியாற்றிய விக்கி பவ்மேன் முகவரி மாற்றத்தை தெரிவிக்க தவறியதால் கைது செய்யப்பட்டார்.

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்பட தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. வெளிநாட்டினர் சிலரும் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்தநிலையில் மியான்மர் நாட்டின் தேசிய தினத்தையொட்டி சிறையில் இருந்து 5774 கைதிகளுக்கு மியான்மரின் மாநில நிர்வாக கவுன்சில் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளது. அரசு தொலைக்காட்சி சேனலான எம்ஆர்டிவியை மேற்கோள் காட்டி சின்ஹுவா இத்தகவலை தெரிவித்துள்ளது.

பொதுமன்னிப்பு பெற்றவர்களில் இங்கிலாந்து முன்னாள் தூதர் விக்கி பவ்மேன், ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், ஜப்பானிய பத்திரிகையாளர் டோரூ குபோடா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கலைஞர்கள் ஆகியோரும் அடங்குவர்.

தூதராக பணியாற்றிய விக்கி பவ்மேன் தனது வெளிநாட்டவரின் பதிவுச்சான்றிதழில் குறிப்பிட்ட முகவரியில் இருந்து வேறு முகவரியில் வசிப்பதை தெரிவிக்க தவறியதால் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் ஹெட்டீன் லின்னும் கைது செய்யப்பட்டார். அவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சீன் டர்னெல், மியான்மர் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஆலோசகராக செயல்பட்டவர் ஆவார்.

Similar News