இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் அசைவ உணவு - விமர்சித்த இந்து தலைவர்கள்
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
- இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது.
அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த விருந்தில் அசைவ உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் வாழும் சில இந்து தலைவர்கள் அந்நாட்டு பிரதமரை கடுமையாக விமர்சித்தனர்.
சென்ற வருடம் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரிஷி சுனக் அளித்த விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை உண்டு பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.