உலகம்

தென் கொரிய எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா

Published On 2024-07-01 02:32 GMT   |   Update On 2024-07-01 02:32 GMT
  • ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது.
  • அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது. இரு நாடுகள் இடையே பதற்ற சூழல் நிலவும் நிலையில், புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அதிகாலை வேளையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மற்றொரு ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. மேலும், வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்த தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பகிரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

ஏவுகணை சோதனை குறித்து வட கொரியா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் ஏராளமான ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா தெரிவித்து இருந்தது. இதற்கு பதிலளித்த தென் கொரியா சில ஏவுகணைகள் நடுவானில் வெடித்து சிதறியதாக தெரிவித்தது.

Tags:    

Similar News