உலகம்

பிளாஸ்டிக்

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - நார்வே, டென்மார்க் வரவேற்பு

Published On 2022-07-01 23:09 GMT   |   Update On 2022-07-01 23:09 GMT
  • ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஓஸ்லோ:

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. 100 மைக்ரோனுக்கு குறைவான பிவிசி அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1-ம் தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனையை மற்றும் பயன்பாட்டை தடுக்க மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை நார்வே அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய நார்வே தூதர்(பொறுப்பு) மார்ட்டின் ஆம்டால் போத்தேம் கூறுகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக்கை தடை செய்த இந்திய அரசின் நடவடிக்கையை நார்வே வரவேற்கிறது. இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள். எங்கள் தூதரக வளாகத்தில் இந்த பிளாஸ்டிக் தடை நடவடிக்கையை மிகத் தீவிரமாக கடைபிடிப்போம். நார்வேயில் கடந்த ஆண்டே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் உள்ள நகராட்சிகளுடன் பிளாஸ்டிக் குப்பைகளை எப்படி கையாள்வது என்பதை பகிர்ந்து கொண்டோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News