புதிய அதிபர் தேர்வாகி 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்
- கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
- ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .
மெக்சிகோவில் புதிய அதிபர் பதியேற்ற ஒரு நாளுக்குள் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக மெக்சிகோவில் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ அதிபாராக தேர்வான 24 மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ் ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .
கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 4) அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அரசு தரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.