உலகம்

இஸ்ரேல் ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டிவைக்கப்பட்ட பாலஸ்தீனியர் - அமெரிக்கா கண்டனம்

Published On 2024-06-25 09:50 GMT   |   Update On 2024-06-25 09:50 GMT
  • இஸ்ரேல் - ஹமாஸ் சண்டையில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
  • பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "மனிதர்களை கேடயமாக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News