தீபாவளி பண்டிகையை பொது விடுமுறையாக அறிவித்தது பென்சில்வேனியா மாகாணம்
- இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
- பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
வாஷிங்டன்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். இதையடுத்து, இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.