இந்தியா-கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது - பிரதமர் மோடி பெருமிதம்
- கிரீஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
- அப்போது, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா என்றார்.
ஏதென்ஸ்:
தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு கிரீஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா.
இதன்மூலம் நிலவில் நம் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.
சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
கிரீஸ் எனக்கு உயரிய விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா-கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது.
இரு பெரும் நாகரீக நாடுகள் இன்று நட்புறவு கொண்டுள்ளது. வானவியலும், கணிதவியலும் இணைந்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு வழஙகி உள்ளோம். பல லட்சம் பேர்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.
நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் 5ஜி சேவையை கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.