உலகம்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Published On 2022-09-15 17:32 GMT   |   Update On 2022-09-15 17:32 GMT
  • ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது.
  • கொரோனாவால் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு கடந்த 2 ஆண்டாக நடக்கவில்லை.

தாஷ்கண்ட்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அதன்பிறகு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெறவில்லை.

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரைச் சென்றடைந்தார்.

இந்த மாநாட்டின் போது மோடி உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.

உக்ரைனில் ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி மற்றும் புதின் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News