உலகம் (World)

இந்தியா-ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

Published On 2024-10-10 21:03 GMT   |   Update On 2024-10-10 21:03 GMT
  • ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது என்றார் பிரதமர் மோடி.
  • கலாசார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

லாவோஸ்:

21-வது ஆசியான்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் வரும் 11-ம் தேதி நடக்கிறது. இதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், லாவோசில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், பிலிப்பைன்ஸ் அதிபர், ஆஸ்திரேலியா அதிபர் அல்பானீஸ், மலேசிய அதிபர் அன்வர் இப்ராகிம், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜப்பான் பிரதமரைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. அவர் ஜப்பானின் அதிபரான சில நாள்களிலேயே அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேச்சுக்கள் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கானது. கலாசார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News