உலகம் (World)

மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் அல்ல: ஐ.நா.சபையில் பிரதமர் மோடி

Published On 2024-09-24 01:08 GMT   |   Update On 2024-09-24 01:08 GMT
  • ஐ.நா.சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
  • அப்போது, மனித குலத்தில் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது என்றார்.

நியூயார்க்:

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியஉரையாதாவது:

மனித குலத்தின் ஆறில் ஒரு பங்கினரின் குரலை இங்கு பதிவுசெய்ய நான் வந்துள்ளேன்.

இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம்.

நிலையான வளர்ச்சியை வெற்றிகரமாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்டியுள்ளது.

எங்களின் அனுபவத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது. போர்க்களத்தில் அல்ல.

உலகின் அமைதி, வளர்ச்சிக்கு உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம்.

ஒருபுறம், பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

மறுபுறம், சைபர், கடல் மற்றும் விண்வெளி ஆகியவை மோதலின் புதிய வடிவமாக உருவாகி வருகின்றன.

இந்த எல்லாப் பிரச்சனைகளிலும் உலகளாவிய நடவடிக்கை உலகளாவிய லட்சியத்துடன் பொருந்த வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு, சமநிலை ஒழுங்குமுறை தேவை.

இறையாண்மையும் ஒருமைப்பாடும் அப்படியே இருக்கும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகையை நாங்கள் விரும்புகிறோம்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக்கூடாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்பது உறுதி என தெரிவித்தார்.

Tags:    

Similar News