உலகம் (World)

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிக முக்கியமானது: பிரதமர் மோடி

Published On 2024-10-10 17:53 GMT   |   Update On 2024-10-10 17:53 GMT
  • இந்தியா - ஆசியான் அமைப்பின் 21வது உச்சி மாநாடு லாவோசில் நடைபெற்றது
  • இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டாக்கும் கடமை நமக்கு உள்ளது என்றார் பிரதமர் மோடி.

லாவோஸ்:

வியட்நாமின் லாவோஸ் நகரில் நடந்த ஆசியான்- இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை உள்ளது. புருனேவிற்கும் விரைவில் துவங்க உள்ளது.

கிழக்கு தைமூரில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

நாளந்தா பல்கலையின் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஆசியான் நாடுகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று ஆகட்டும், இயற்கை பேரிடர் ஆகட்டும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகிறோம்.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலர் ஆக அதிகரித்துள்ளது.

நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.

21-ம் நூற்றாண்டானது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என நம்புகிறேன். இன்று உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலை இருக்கும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிக முக்கியமானது என தெரிவித்தார்.

Tags:    

Similar News