உலகம் (World)

இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது: விக்ரமசிங்கே

Published On 2024-06-12 09:35 GMT   |   Update On 2024-06-12 10:23 GMT
  • இலங்கை அதிபரின் பதவிக்காலத்தை இரண்டு வருடத்திற்கு நீட்டிக்க விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது.
  • அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16-ந்தேதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்தது. தற்போது அதில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வருகிறது. அதிபராக இருக்கும் விக்ரமசிங்கே மறுசீரமைப்பு செய்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அதிபர் தேர்தல் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என விக்ரமசிங்கே கட்சி பரிந்துரை செய்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது சட்ட அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்தது.

தேர்தல் ஆணையமும் செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 16-ந்தேதி வரைக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

இந்த நிலையில் அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "வரவிருக்கும் அதிபர் தேர்தல் என்னைப் பற்றிய தனிநபர் தேர்தல் அல்ல. இது என்னுடைய வெற்றி அல்லது தோல்வி பற்றியது அல்ல. இது நாட்டின் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிப்பதாகும்.

இந்த தேர்தல் தனி நபர்களை தேர்வு செய்யும் சாதாரணமான தேர்தல் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்காக மிகவும் பயனுள்ள சிஸ்டத்தை தேர்வு செய்வது பற்றியது. தற்போதைய அணுகுமுறையின் தகுதியை நீங்கள் நம்பினால், அதன்படி தொடரலாம்.

இவ்வாறு விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News