உலகம்

போருக்கு மத்தியில் மழை - குளிரால் தவிக்கும் காசா மக்கள்

Published On 2024-01-03 05:17 GMT   |   Update On 2024-01-03 08:08 GMT
  • இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தெற்கு பகுதியில் தஞ்சம்.
  • மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் மழை, குளிரால் மேலும் அவதி.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரால் காசா மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து தெற்கு காசாவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரை கையில் பிடித்தப்படி இருக்கிறார்கள். மேலும் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காசாவில் ரபா நகரில் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதேபோல் மற்ற பகுதிகளிலும் மழை பெய்கிறது. இதனால் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர். ஏற்கனவே உணவு பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்களுக்கு தற்போதைய மழை துயரத்தை அதிகப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News