தெற்கு சீனாவை புரட்டி எடுத்த மழை: ஊருக்குள் பாய்ந்த வெள்ளம் - 4 பேர் பலி
- . மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.
தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளது.
குவாங்டாங்கின் ஷென்சென் மெகாசிட்டி பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஷாவோகிங் நகரில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் 2 நகரங்கள் தொடர் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான கடை வீதிகள் , குடியிருப்பு பகுதிகள் மூழ்கின. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தில் 1,500 ஹெக்டேர் விளைநில பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சில கிராமங்களில் நெல் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள் மூழ்கின. பல இடங்களில் 2 வது மாடி வீடுகள் வரை மழை நீர் சூழ்ந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது. மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.