உலகம் (World)

2 ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - ஜப்பானில் பரபரப்பு

Published On 2023-06-10 08:54 GMT   |   Update On 2023-06-10 10:03 GMT
  • 2 ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால் எவ்வித பாதிப்பும் இல்லை.
  • இதனால் ஜப்பான் விமான நிலைய ரன்வேயில் ஒன்று மூடப்பட்டது.

டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி கொண்டன.

பாங்காக் நோக்கி சென்ற தாய் ஏர்வேஸ் இன்டர் நேஷனல் விமானமும், சீன தைபேவுக்கு புறப்பட்ட இ.வி.ஏ. ஏர்வேஸ் விமானமும் உரசி கொண்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, செய்தி வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலி காட்சிகளில் தாய் ஏர்வேஸ் விமான இறக்கையின் ஒரு பகுதி உடைந்திருப்பதையும், உடைந்த இறக்கையின் சில பகுதிகள் போன்று காட்சியளிக்கும் சில பொருட்கள் ரன்வே அருகே இருப்பதையும் காணமுடிகிறது.

இதையடுத்து, விமான நிலையத்தில் ரன்வேக்கள் மூடப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News