உலகம்
உக்ரைனின் கீவ், கார்கிவ் நகரங்களை குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
- ரஷிய ராணுவம் பிடித்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.
கீவ்:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் 10 மாதமாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 60 முதல் 70 வரையிலான குண்டுகளை வீசியதாகவும், மின்நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெற்றது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.