உலகம்

உலக சுகாதார அமைப்பு: தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம்

Published On 2024-01-23 15:02 GMT   |   Update On 2024-01-23 15:02 GMT
  • வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வஜேத்.
  • இவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

ஜெனீவா:

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்தப் பதவி வகிப்பார்.

சைமா வஜேத்தின் பதவிக் காலம் 2024, பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பதவியை அடைந்த வங்காளதேசத்தின் 2-வது பிரதிநிதி இவர்.

இவர் வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News