கயிற்றில் நடந்து உலகின் நீண்ட தூர பயணம்- வைரல் வீடியோ
- மெசினா ஜலசந்தியை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
- கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார்.
இத்தாலியில் உள்ள மெசினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை சுமார் 3.6 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஸ்லாக்லைன் எனும் கயிற்றுப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சர்க்கஸ் வீரர்கள் போல பயிற்சி பெற்ற சாகச வீரர்கள் மட்டுமே நடக்க முடியும் ஒற்றைக் கயிறு நடைபாலம் இது. இதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே நடந்து சாதனை பயணம் மேற்கொள்கிறார்கள்.
தற்போது இந்த கயிற்றுப் பாலத்தில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ், நீண்ட தூரம் நடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். மெசினா ஜலசந்தியை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
இவர் கயிற்றில் நடக்கும்போது வீடியோ பதிவிலும் பேசி இருக்கிறார். அவர் கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார். இருந்தபோதிலும் கயிற்றுப்பாலத்தின் 3 ஆயிரத்து 566 மீட்டரை கடந்த அவர், எஞ்சிய 80 மீட்டரை கடப்பதற்குள் சமநிலையை தவறவிட்டு, கீழிறங்கியதால் முழுமையான புதிய சாதனையை தவறவிட்டார். அவர் கடலுக்கு மேலே நடந்தபோது 100 மீட்டர் உயரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.57 மணி நேரத்தில் இந்த தூரத்தை அவர் கடந்தார். அதுபற்றிய வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பரவுகிறது.