உலகம்

இலங்கையில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு

Published On 2024-09-21 21:11 GMT   |   Update On 2024-09-21 21:11 GMT
  • வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
  • இலங்கையில் நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மனிக்கு நிறைவடைந்தது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்பு பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

இந்நிலையில், இலங்கையில் நாளை (செப்டம்பர் 23-ம் தேதி) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் விசேஷ பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News