உலகம்
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி
- ஜப்பானில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.
டோக்கியோ:
ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா நகரின் ஹோன்ஷு தீபகற்பத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.