3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்- சீன அதிபர் ஜின்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு
- பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
- பொது குளியலறை சுவர்களில் ஜின்பிங்குக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
சீனாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. அதிபராக ஜி ஜின்பிங் உள்ளார். ஆளுங்கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதற்கிடையே ஜின்பிங் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீஜிங் நகரில் சீன அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிராக பேனர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பீஜிங்கை போல் மற்ற நகரங்களிலும் மக்களின் போராட்டம் பரவியுள்ளது.
பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள பொது குளியலறை சுவர்களில் ஜின்பிங்குக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்களில் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்தது.