உலகம் (World)

டெஸ்லா நிறுவனத்தின் ரூ.3.22 லட்சம் கோடி பங்குகளை விற்பனை செய்தார் எலான் மஸ்க்

Published On 2022-11-09 07:55 GMT   |   Update On 2022-11-09 07:56 GMT
  • எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன பங்குகளில் சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்பனை.
  • பங்கு விற்பனை குறித்த தகவலை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை மையம் தெரிவித்தது.

உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பொறுப்பை ஏற்று கொண்டதும் டுவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார்.

முக்கிய நிர்வாகிகளை நீக்கியதோடு, வாடிக்கையாளர்களின் கணக்குகளை சரிபார்க்கும் புளூ டிக் பயன்பாட்டிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன பங்குகளில் சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான 19.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தார்.

இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.22 லட்சம் கோடியாகும். இந்த பங்கு விற்பனை குறித்த தகவலை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை மையம் தெரிவித்தது.

Tags:    

Similar News