உலகம்

இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்- வெளிநாட்டவர்களின் குடியேற்றம் உயர்வு

Published On 2024-03-31 03:00 GMT   |   Update On 2024-03-31 03:00 GMT
  • கடந்த 2022-ல் குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.
  • சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோம்:

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதன்மூலம் சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அவர்கள் உதவியாக இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News