'சைக்' சிறுகோளை ஆய்வு செய்ய விண்கலன் அனுப்பிய நாசா
- சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது.
- சைக்கில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பால் வெளி மண்டலத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் சிறுகோள்கள், விண்கற்கள் ஆகியவை அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. அங்கு அமைந்துள்ள சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது. முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களாலான அந்த சிறுகோளை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. அதன்படி ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த சிறுகோளுக்கு விண்கலனை ஏவி உள்ளது. புளோரிடா மாகாணம் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
பூமியில் இருந்து 50 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சைக் சிறுகோளை ஆறு ஆண்டுகளுக்குள் சென்றடையும்படி நாசா வடிவமைத்துள்ளது. நாசா கணிப்பின்படி செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் குறைந்த உந்துதல் கொண்ட மின்சார உந்துவிசை என்னும் நவீன முறையை பயன்படுத்தி சிறுகோள் குவியலை கடந்து பயணித்து சைக்கை நெருங்கும். பின்னர் 4 நிலை சுற்றுப்பாதையை அமைத்து கொண்டு பயணித்த பின்னர் சைக்கில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.