சவுதி அரேபியாவில் விரைவில் திறக்கப்படும் முதல் மதுபானக்கடை
- வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
- மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.
மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.
சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,'மொபைல் செயலி' மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது.