உலகம் (World)

(கோப்பு படம்)

சிட்ரங் புயல்- ஆயிரக்கணக்கான மக்கள், கால்நடைகள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றம்

Published On 2022-10-24 23:00 GMT   |   Update On 2022-10-24 23:20 GMT
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 576 பாதுகாப்பு முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
  • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மேற்கு வங்க அரசு வலியுறுத்தல்.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. வங்காளதேசத்தை இன்று அது கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் உதவ வேண்டும்104 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 323 டன் அரிசி உள்பட உணவு பொருட்களும் விநியோகிக் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News