தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி.. நெருங்கும் கமலா - முந்தும் டிரம்ப்
- 51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார்
- 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரல் பிரதிநிதிகளின் வாக்காகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். 51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 209 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தற்போது 47.5% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
ஆனால் உண்மையில் வெற்றியை தீர்மானிக்கப்போகும் ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஸ்விங் மாகாணமாக வட கரோலினாவில் மொத்தம் உள்ள 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
இதைதவிர்த்து மீதமுள்ள பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் 6 ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. அரிசோனாவில் 11, நெவேடாவில் 6, விஸ்கான்சின் 10, மிச்சிகனில் 11, பென்சில்வேனியாவில் 19, ஜார்ஜியாவில் 16 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன.
ஜார்ஜியா: டிரம்ப் - 50.8%, கமலா - 48.5%
அரிசோனா: டிரம்ப் - 49.8%, கமலா - 49.3%
நெவேடா: டிரம்ப் - 52.2%, கமலா - 46.1%
விஸ்கான்சின்: டிரம்ப் - 51.2%, கமலா - 47.3%
பென்சில்வேனியா: டிரம்ப் - 50.9%, கமலா - 48.1% வாக்குகள் இடைவெளியில் உள்ளனர்.