அரை மணி நேரத்தில் இரண்டு முறை.. நள்ளிரவில் ஆப்கனை உலுக்கிய நிலநடுக்கம்
- ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
ஆப்கானஸ்தானின் ஃபைசாபாத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
முதல் நிலநடுக்கம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.28.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 12.55.55 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
"03.01.2024, நள்ளிரவு 12.28.52 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. 03.01.2024, நள்ளிரவு 12.55.55 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருக்கிறது," என ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கவியலுக்கான தேசிய ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்துள்ளது.